வயது மூப்பு காரணமாக ராமதாஸால் முடிவெடுக்க முடியாது என நீதிமன்றத்தில் அன்புமணி பரபரப்பு மனு

வயது மூப்பு காரணமாக ராமதாஸால் முடிவெடுக்க முடியாது என நீதிமன்றத்தில் அன்புமணி பரபரப்பு மனு

ராமதாஸிற்கு தற்போது 87 வயதாவதால் மருத்துவ ரீதியாக அவரால் நிர்வாக முடிவுகளை எடுக்க இயலாது என அன்புமணி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கட்சியின் கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கில், சிலரின் தூண்டுதலால் ராமதாஸ் தவறாக வழிநடத்தப்படுவதாகவும், பொதுக்குழுவிற்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அன்புமணி தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு ராமதாஸிற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தையையும் மகனையும் மோதவிட்டுள்ள இந்த அதிகாரப் போட்டி, மார்ச் 11 ஆம் தேதி நடைபெறும் அடுத்தகட்ட விசாரணையில் எத்தகைய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *