வயதாகும்போது ஆண்குறியின் அளவு குறையுமா? நிபுணர்கள் பகிரும் அதிரடி உண்மைகள்
December 20, 2025

வயது ஏறும்போது ஆண்களின் உடல்நலத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, 30 வயதிற்குப் பிறகு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதால் பாலியல் ஆர்வம் மற்றும் உணர்திறன் குறைகிறது. திசுக்களின் நெகிழ்ச்சித் தன்மை குறைவதாலும், கொழுப்பு படிவதாலும் உறுப்பின் அளவு 1 முதல் 1.5 செமீ வரை சுருங்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதும் நரம்புத் தளர்ச்சியும் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு வழிவகுக்கின்றன. ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி மூலம் இந்த பாதிப்புகளைக் குறைக்கலாம். உறுப்பின் அளவில் மாற்றம் அல்லது பலவீனம் தெரிந்தால் தயக்கமின்றி மருத்துவரை அணுகுவது அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.