வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி மத்திய அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள்

வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி மத்திய அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் வணிக எரிவாயு இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க உள்நாட்டு உற்பத்தியை மத்திய அரசு 25 சதவீதம் அதிகரித்துள்ளது. சிலிண்டர் முன்பதிவுக்கான கால அவகாசம் தற்போது 21 முதல் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. நிலைமையைச் சீராக்க மாநிலங்களுக்குக் கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், வணிக நிறுவனங்கள் தற்காலிகமாக மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *