வசூலித்த பணத்தை திருப்பி கொடு டிரம்பிற்கு எதிராக ஃபெட்எக்ஸ் அதிரடி வழக்கு

வசூலித்த பணத்தை திருப்பி கொடு டிரம்பிற்கு எதிராக ஃபெட்எக்ஸ் அதிரடி வழக்கு

அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகள் செல்லாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், முன்னணி நிறுவனமான ஃபெட்எக்ஸ் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. தாங்கள் செலுத்திய வரிப்பணம் முழுவதையும் திரும்பப் பெற வேண்டும் என அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு டிரம்பிற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகவே சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தை திரும்பப் பெறுவதில் சட்ட சிக்கல்கள் நீடிக்கின்றன. நீதிமன்றம் வரிகளை ரத்து செய்தாலும், பணத்தை தானாக திரும்ப வழங்க உத்தரவிடவில்லை. இதனால் ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக வழக்கு தொடர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே, டிரம்ப் நிர்வாகம் புதிய வரி விகிதங்களை அமல்படுத்தி உலக நாடுகளுக்கு மீண்டும் அதிர்ச்சியளித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *