வகுப்பறையில் மாணவியிடம் காதலை சொன்ன பேராசிரியருக்கு தர்ம அடி

வகுப்பறையில் மாணவியிடம் காதலை சொன்ன பேராசிரியருக்கு தர்ம அடி

கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியர் அப்துல் என்பவர், வகுப்பறையிலேயே மாணவி ஒருவரிடம் தனது காதலை வெளிப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மாணவர்களின் முன்னிலையில் அரங்கேறிய இந்த அநாகரீக செயலால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள், அந்த பேராசிரியரை கல்லூரி வளாகத்திலேயே சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாநில உள்துறை அமைச்சருக்கு சொந்தமான கல்லூரியில் நடந்த இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வி கற்கும் இடத்தில் ஆசிரியரின் இத்தகைய செயல் தார்மீக நெறிமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *