லெமன் ஜூஸ் பில்லில் கேஸ் சார்ஜ் வசூலித்த பெங்களூரு உணவகம் வைரலாகும் வினோத சம்பவம்
March 16, 2026

பெங்களூருவில் உள்ள பிரபல உணவகத்தில் லெமன் ஜூஸ் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பில்லில், ‘கேஸ் சார்ஜ்’ என கூடுதலாக 17 ரூபாய் வசூலிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த பில் வைரலானதை அடுத்து, “குடித்தது ஜூஸ், அதற்கு எதற்கு கேஸ்?” என நெட்டிசன்கள் கிண்டலாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள உணவக நிர்வாகம், பில்லில் கேஸ் சார்ஜ் தானாகவே பதிவானாலும், கேஸ் பயன்படுத்தப்படாத உணவுகளுக்கு அந்தத் தொகை தள்ளுபடி என்ற பெயரில் கழிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த வினோத கட்டண முறையினால் இணையத்தில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன.