லாரி டிரைவர் மகன் ஆர்சிபி அணியில் பல கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பெற்று சாதனை
March 27, 2026

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மங்கேஷ் யாதவை ₹5.2 கோடிக்கு ஆர்சிபி ஒப்பந்தம் செய்துள்ளது. லாரி ஓட்டுநரின் மகனான இவர், டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் தொடங்கி கடின உழைப்பால் இந்த உயரத்தை எட்டியுள்ளார். டி20 லீக் போட்டிகளில் தொடர் நாயகன் விருது வென்றது இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.
தினேஷ் கார்த்திக்கின் கவனத்தை ஈர்த்த மங்கேஷ், தற்போது விராட் கோலி போன்ற ஜாம்பவான்களுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசி வருகிறார். சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் இவருக்குப் பெரிய தொகை கிடைத்துள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே இவர் களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.