லண்டன் மற்றும் சிங்கப்பூர் பாணியில் நடத்துனர் இல்லாத சொகுசு தங்க ரத பேருந்துகள் சென்னையில் அறிமுகம்

லண்டன் மற்றும் சிங்கப்பூர் பாணியில் நடத்துனர் இல்லாத சொகுசு தங்க ரத பேருந்துகள் சென்னையில் அறிமுகம்

சென்னையின் ஐடி பாதையான ஓஎம்ஆர் சாலையில் நடத்துனர் இல்லாத அதிநவீன மின்சார ஏசி பேருந்து சேவையை தமிழக போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது. லண்டன் மற்றும் சிங்கப்பூர் போன்ற உலகத்தரம் வாய்ந்த இந்த ‘தங்க ரத’ பேருந்துகளில் பயணிகள் ‘சென்னை ஒன்’ ஆப் மூலம் மட்டுமே பயணச்சீட்டு பெற முடியும். முதற்கட்டமாக கோயம்பேடு முதல் சிறுசேரி மற்றும் திருவான்மியூர் முதல் தாம்பரம் வரை இந்த சொகுசு சேவை இயக்கப்படுகிறது.

இந்த பேருந்துகளில் பயண தூரத்திற்கு ஏற்ப 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலவச வைஃபை, சிசிடிவி மற்றும் தாழ்தள வசதி கொண்ட இந்த பேருந்துகள், சொந்த வாகனங்களில் செல்வோர் பொதுப் போக்குவரத்திற்கு மாற உதவும். இத்திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுக்கும் இந்த சொகுசு பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *