ரோஹித்தின் மோசமான சாதனை: IPL டக் அவுட் பட்டியலில் முதலிடம்

ரோஹித்தின் மோசமான சாதனை: IPL டக் அவுட் பட்டியலில் முதலிடம்

மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் தலைசிறந்த ஓப்பனர் ரோஹித் ஷர்மா, நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான போட்டியில் 0 ரன்னில் அவுட்டாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார். இந்த ஆட்டத்தில் அவர் வெறும் 4 பந்துகளில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம், ரோஹித் ஷர்மா IPL வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டாகிய வீரர் என்ற விரும்பத்தகாத சாதனையை சமன் செய்துள்ளார். அவருடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 18 முறை டக் அவுட்டாகி இந்த பட்டியலில் இணைந்து முதலிடம் வகிக்கிறார்கள்.

‘ஹிட்மேன்’ என்று அழைக்கப்படும் ரோஹித்தின் இந்த தொடர்ச்சி அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தம் அளிக்கிறது. “இது என்னடா ஹிட்மேனுக்கு வந்த சோதனை?” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *