ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கப்படும் அபாயம்
March 16, 2026

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களின் கைரேகையை பதிவு செய்வது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 25-ஆம் தேதிக்குள் இந்த நடைமுறையை முடிக்காத உறுப்பினர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதோடு, அவர்களுக்குரிய மானிய விலைப் பொருட்கள் வழங்கப்படுவதும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் இந்த கைரேகை பதிவைச் செய்துகொள்ளலாம். மேலும், புதிய அட்டை விண்ணப்பம் மற்றும் பெயர் சேர்த்தல் போன்ற சேவைகளை ஆன்லைன் வாயிலாகவே எளிய முறையில் பெற்றுக்கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது.