ரூபாய் ஆயிரத்திற்காக மனைவியையே விற்ற கணவன்! உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்
February 12, 2026

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் கணவனே தனது மனைவியை ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு நபர்களிடம் விற்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேஸ் ஏஜென்சிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, பாப்பு மற்றும் பாலகிஷன் என்ற நபர்களிடம் ஒப்படைத்த கணவன், இனி உன் மூலமே பணம் சம்பாதிப்பேன் எனத் துணிச்சலாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அந்த நபர்கள் பெண்ணை ஒரு தோட்டத்திற்கு கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.