ராஜபாளையம் சீட் விவகாரத்தில் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை கவுதமி
March 27, 2026

ராஜபாளையம் தொகுதியை அதிமுக தலைமை கூட்டணிக்கு ஒதுக்கியதால் அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவல்களை நடிகை கவுதமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் என்றும் தேர்தல் நேரத்தில் சிலர் தேவையற்ற குழப்பத்தை விளைவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ள அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தீவிரமாக பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், அதிமுகவின் வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தனது தற்போதைய நோக்கம் என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.