ராகுல் காந்தியுடன் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சீரழிந்துவிட்டனர் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்
March 13, 2026

நாடாளுமன்ற மக்களவையில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் கண்டனம் தெரிவித்தார். அவையின் நடவடிக்கைகளைச் சீர்குலைக்கும் செயல்களால் மக்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று சாடிய அவர், எதிர்க்கட்சிகள் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று ஆக்ரோஷமாகப் பேசினார்.
ராகுல் காந்திக்கு நிலைமையை எடுத்துச் சொல்ல காங்கிரஸில் தகுதியான தலைவர்கள் எவரும் இல்லை என்று வருத்தம் தெரிவித்த அமைச்சர், ராகுலுடன் சேர்ந்து மற்ற தலைவர்களும் சீரழிந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். தவற்றைச் சரிசெய்ய இன்னும் காலம் இருக்கிறது என்றும், இல்லையெனில் மக்கள் உங்களைத் தண்டிப்பார்கள் என்றும் எச்சரித்தார். இந்த அமளியால் மக்களவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.