ரஷ்யாவுடன் போரா? பிரித்தானியாவின் அதிரடி முடிவால் உலகமே அதிர்ச்சி!

ஐரோப்பாவின் கதவு தட்டப்படுகிறதா? ரஷ்யாவுடன் நேரடி மோதல் ஏற்படும் என்ற அச்சத்தில் பிரித்தானியா தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. போர் மூண்டால் பாதுகாப்பு என்னவாகும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு ஒரு முக்கிய மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
படை வீரர்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட, 65 வயது வரையிலான ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்களை மீண்டும் போர்க்களத்திற்கு அழைக்கும் முன்னோடியில்லாத முடிவை பிரித்தானியா எடுத்துள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் மாஸ்கோவுடன் போர் தொடங்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், தனது இராணுவ பலத்தை அதிகரிக்க 10,000 முதல் 55,000 முன்னாள் வீரர்களை மீண்டும் பணியில் அமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. நவீன உபகரணங்கள் மற்றும் பட்ஜெட் பற்றாக்குறை இருந்தாலும், இந்த புதிய சட்டத்தின் மூலம் ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுக்க பிரித்தானியா தீவிரமாக முயன்று வருகிறது.