ரஷ்மிகா மந்தனா: ரூ.66 கோடி சொத்து சொந்தக்காரி!

சினிமா மற்றும் விளம்பர உலகில் வெற்றிகரமாக திகழும் நடிகை ரஷ்மிகா மந்தனா, தற்போது ₹66 கோடி மதிப்புள்ள சொத்து சொந்தக்காரியாக உள்ளதாக Forbes அறிக்கை தெரிவித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புஷ்பா 2 படத்தில் நடிப்பதற்காக அவர் ₹10 கோடி சம்பளம் பெற்றுள்ளார். பொதுவாக ஒவ்வொரு படத்திற்கும் அவர் ₹4 கோடி வரையிலான சம்பளத்தை பெற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது.
சினிமாவிற்குப் பிறகும் பல பிரபல பிராண்டுகளின் விளம்பரங்களில் அவர் முக்கியமான இடம் பிடித்துள்ளார். BOAT, 7UP, Meesho போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் கூடுதல் வருமானத்தை சம்பாதித்து வருகிறார்.
ரஷ்மிகா மந்தனாவின் சொத்துக்கள் குறித்து பார்க்கும்போது, பெங்களூருவில் மட்டும் ₹8 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வைத்துள்ளார். அதைவிட அதிகமாக நாடு முழுவதும் நான்கு முக்கிய இடங்களில் அவர் சொத்துக்கள் வைத்திருக்கிறார். மேலும், Audi, Range Rover உள்ளிட்ட நான்கு சொகுசு கார்களும் அவரது சொத்து பட்டியலில் இடம்பெற்றுள்ளன.