ரயில்வே டிக்கெட் முன்பதிவில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி மாற்றம்

ரயில்வே டிக்கெட் முன்பதிவில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி மாற்றம்

இந்திய ரயில்வே சுமார் 1,000 கோடி ரூபாய் செலவில் பயணிகளின் முன்பதிவு முறையை (PRS) நவீனப்படுத்துகிறது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு வேகம் ஐந்து மடங்கு அதிகரிக்கும். தற்போது நிமிடத்திற்கு 25,000 டிக்கெட்டுகள் என்ற நிலை மாறி, இனி 1.25 லட்சம் டிக்கெட்டுகள் வரை பதிவு செய்ய முடியும். ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் அமலுக்கு வரவுள்ள இந்த புதிய வசதி, பயணிகளுக்கு சர்வர் கோளாறுகளிலிருந்து முழுமையான தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள பழைய மென்பொருளுக்குப் பதிலாக மேம்பட்ட ஓப்பன் சோர்ஸ் தளம் பயன்படுத்தப்படுவதால், சட்டவிரோத முன்பதிவுகள் மற்றும் தரகர்களின் தலையீடு முற்றிலும் தடுக்கப்படும். இதற்காக 2.5 கோடி போலி ஐடிக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளன. சைபர் பாதுகாப்புக்காக 600 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள முன்பதிவு முனையங்கள் தரம் உயர்த்தப்படுவதால், தட்கல் முறையிலும் சாதாரண மக்கள் எளிதாக டிக்கெட் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *