ரஜினிகாந்த் குறித்த சர்ச்சைப் பேச்சால் ஆதவ் அர்ஜுனாவுக்கு பாஜக கடும் கண்டனம்

திமுக கொடுத்த பயத்தால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை எனத் தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விஜய்யின் தவெக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
மத்திய அமைச்சர் எல்.முருகன், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்தைக் கண்டித்துள்ளனர். இதன் மூலம் தவெக – பாஜக கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஒருபுறம் இது தவெக நிர்வாகிகளிடையே நிம்மதியைத் தந்தாலும், மறுபுறம் தேர்தலை எதிர்கொள்வது குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் குறித்த அவதூறுப் பேச்சு தற்போது கூட்டணியில் முறிவை ஏற்படுத்தியுள்ளது.