ரஃபேல் போர் விமான ரகசியங்களை பகிர மறுக்கும் பிரான்ஸ் பின்னணி என்ன

இந்தியாவிற்கு 114 ரஃபேல் போர் விமானங்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தில், அதன் முக்கியமான ‘சோர்ஸ் கோட்’ எனப்படும் மென்பொருள் ரகசியங்களை வழங்க பிரான்ஸ் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தனது தொழில்நுட்ப உரிமத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் பிரான்ஸின் நேரடி உதவி இன்றி இந்திய ஆயுதங்களை இந்த விமானங்களில் இணைப்பது சவாலானதாக மாறும்.
சோர்ஸ் கோட் இல்லாதது போர் காலங்களில் மென்பொருளை விரைவாக மாற்றியமைக்கும் திறனை பாதிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கு மாற்றாக ‘பிளக் அண்ட் பிளே’ முறையில் ஏபிஐ தொழில்நுட்பத்தை வழங்க பிரான்ஸ் முன்வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தைப் போலவே, இந்தியாவும் தனது சொந்த தொழில்நுட்பங்களை ஓரளவிற்கு சுதந்திரமாக ஒருங்கிணைக்க முடியும்.