யுபிஐ பின் தேவையில்லை இனி உங்கள் விரரேகை மூலமே பணம் அனுப்பலாம்

யுபிஐ பின் தேவையில்லை இனி உங்கள் விரரேகை மூலமே பணம் அனுப்பலாம்

யுபிஐ பின் எண்ணை அடிக்கடி மறந்துவிடுபவர்களுக்கு ஒரு நற்செய்தி. பீம் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி மூலம், இனி பின் எண்ணிற்கு பதிலாக கைரேகை அல்லது முக அங்கீகாரம் (Face Lock) மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம். குறிப்பாக சிறு பரிவர்த்தனைகளை வேகப்படுத்த இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் 5,000 ரூபாய் வரையிலான தொகையை பின் எண் இல்லாமலேயே பாதுகாப்பாக அனுப்ப முடியும், இது தினசரி டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களை எளிதாக்கும்.

பாதுகாப்பு கருதி 5,000 ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு மட்டும் பழையபடி பின் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கைரேகை தரவுகள் மொபைல் சாதனத்திலேயே சேமிக்கப்படுவதால் இது மிகவும் பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்த பீம் செயலியில் உங்கள் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுத்து ‘பயோமெட்ரிக்’ விருப்பத்தை ஆன் செய்ய வேண்டும். இந்த நவீன தொழில்நுட்பம் பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு தடையற்ற பணப் பரிமாற்ற அனுபவத்தையும் வழங்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *