யுடியூப்பில் 2025 ஆம் ஆண்டு இந்தியர்கள் அதிகம் தேடிய சுவாரஸ்யமான தகவல்கள்

யுடியூப்பில் 2025 ஆம் ஆண்டு இந்தியர்கள் அதிகம் தேடிய சுவாரஸ்யமான தகவல்கள்

இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு யுடியூப் தளத்தில் மக்கள் அதிகம் பார்த்த வீடியோக்கள் மற்றும் கிரியேட்டர்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ‘ஸ்குவிட் கேம்’ முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பாலிவுட் ஹிட் பாடலான ‘சையாரா’ மற்றும் ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ‘கூலி’ திரைப்படம் உள்ளன. மேலும் கும்பமேளா மற்றும் ஐபிஎல் 2025 தொடர்பான வீடியோக்களும் டிரெண்டிங்கில் முன்னிலை பெற்றுள்ளன.

பாடல்கள் பிரிவில் ‘சையாரா’ முதலிடத்தைப் பிடிக்க, டாப் கிரியேட்டர்கள் பட்டியலில் மிஸ்டர் பீஸ்ட் முதலிடத்தை அலங்கரிக்கிறார். அவரைத் தொடர்ந்து செஜல் கபா மற்றும் கேசவ் சஷி வ்லாக்ஸ் ஆகியோர் உள்ளனர். பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் ஆன்மீகம் எனப் பலதரப்பட்ட உள்ளடக்கங்களை இந்தியர்கள் விரும்பிப் பார்த்துள்ளதை இந்த ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *