மோனலிசாவின் மர்மப் புன்னகைக்கு பின்னால் இருக்கும் ஆபத்தான நோய்

லியோனார்டோ டாவின்சியின் உலகப்புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தில் உயர் கொலஸ்ட்ரால் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அவரது இடது கண்ணுக்குக் கீழே காணப்படும் ‘சாந்தெலஸ்மா’ எனப்படும் மஞ்சள் நிற கொழுப்பு படிமங்கள், உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்துவதாக இத்தாலிய பேராசிரியர் விட்டோ பிராங்கோ மற்றும் கிளீவ்லேண்ட் கிளினிக் இதய நோய் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த ஆய்வின்படி மோனலிசாவின் உடல்நிலையில் எலும்பு குறைபாடுகள் மற்றும் சிறுநீரகக் கல் பாதிப்புகளும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. 16-ஆம் நூற்றாண்டிலேயே இத்தகைய உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததை இந்த ஓவியம் ஒரு மருத்துவ ஆவணமாக வெளிப்படுத்துகிறது. கலை விமர்சனத்தையும் தாண்டி, ஒரு நோயாளியின் பார்வையில் இந்த ஓவியத்தை அணுகும்போது பல அதிர்ச்சியூட்டும் உடல்நல உண்மைகள் வெளிவருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.