மைத்துனர் கண்முன்னே துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டல்

மைத்துனர் கண்முன்னே துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டல்

உத்தரகாண்டில் திருவிழா முடிந்து திரும்பிய பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தடுக்க முயன்ற பெண்ணை ஆயுதங்களால் தாக்கியதோடு இக்கொடூரத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவோம் என மிரட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ராம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மைத்துனருக்கு தெரிந்தவர்களே இச்செயலில் ஈடுபட்டதால் அவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் ரகசியம் காக்கப்படும் என்றும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை உறுதி அளித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *