மேற்கு ஆசிய எரிபொருள் நெருக்கடியிலும் சீனா நிம்மதியாக இருப்பது எப்படி
March 16, 2026

ஈரான்-இஸ்ரேல் மோதலால் உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவினாலும், தனது சேமிப்பு கொள்கையினால் சீனா பாதுகாப்பாக உள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெய்ஜிங்கின் பெரும் எரிபொருள் இருப்பு அந்நாட்டை வலுவான நிலையில் வைத்துள்ளது. ஜப்பான் அல்லது தென்கொரியாவை விட சீனா இந்த இக்கட்டான சூழலை சிறப்பாக கையாள்கிறது.
தற்போது சீனாவசம் சுமார் 130 கோடி பேரல் கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. இறக்குமதி முழுமையாக நின்றாலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு இது போதுமானதாகும். ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கியும், புதிய சேமிப்பு மையங்களை உருவாக்கியும் சீனா தனது ஆற்றலை அதிகரித்துள்ளது. இந்த வியூகம் மலாக்கா நீரிணையில் தடைகள் ஏற்பட்டாலும் சீனாவின் பொருளாதாரத்தை தடையின்றி இயக்கும்.