மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் காரணமாக பல்லாயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வான்வழி போக்குவரத்து முடக்கம்
March 10, 2026

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் ஈரான், ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளின் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் 40,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சர்வதேச போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாரிலும் விமான சேவைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற பயணிகள் ஆர்வம் காட்டுவதால் சார்ட்டர் விமானங்களுக்கான தேவை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. துபாயிலிருந்து இந்தியா வருவதற்கான தனிநபர் விமான கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க முடியவில்லை என விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.