மேற்கு ஆசியப் போர் பதற்றத்தால் இந்தியாவில் எல்பிஜி மற்றும் சமையல் எரிவாயு விலை கடுமையாக உயரும் அபாயம்

மேற்கு ஆசியப் போர் பதற்றத்தால் இந்தியாவில் எல்பிஜி மற்றும் சமையல் எரிவாயு விலை கடுமையாக உயரும் அபாயம்

மேற்கு ஆசியாவில் நீடிக்கும் இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக இந்தியாவுக்கு இயற்கை எரிவாயு மற்றும் எல்பிஜி விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கத்தார் மற்றும் ஓமன் போன்ற நாடுகளை அதிகம் சார்ந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள தடையால் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்பிஜி தேவையில் சுமார் 70 சதவீதம் இந்த பிராந்தியத்திலிருந்தே பூர்த்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வீட்டு உபயோக சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், தட்டுப்பாடு நீடித்தால் விலை மேலும் அதிகரிக்கக்கூடும். அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், போக்குவரத்து செலவு காரணமாக எரிபொருள் விலை கட்டுக்கடங்காமல் போகும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விநியோகச் சங்கிலி பாதிப்பு சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் வணிக ரீதியான சிலிண்டர் விநியோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *