மூத்த குடிமக்களுக்குப் பெரும் நிம்மதி! சுகாதாரக் காப்பீட்டு GST தொகையைத் திரும்ப அளிக்கும் வங்கிகள்

மூத்த குடிமக்களுக்குப் பெரும் நிம்மதி! சுகாதாரக் காப்பீட்டு GST தொகையைத் திரும்ப அளிக்கும் வங்கிகள்

புதிய ஜிஎஸ்டி கட்டமைப்பின் கீழ், ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டிற்கான ஜிஎஸ்டி விகிதம் 18% இலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மூத்த குடிமக்களுக்குப் பெரிய நிவாரணத்தை அளிக்கிறது. ஓய்வு பெற்ற ஊழியர்களிடமிருந்து சுகாதாரக் காப்பீட்டு பிரீமியத்துடன் ஜிஎஸ்டி தொகையை வசூலித்த பல வங்கிகள், தற்போது அந்த கூடுதல் 18% பணத்தைத் திரும்ப அளிக்கும் பணியைத் தொடங்கியுள்ளன.

மூத்த ஊழியர்களிடமிருந்து சுகாதாரக் காப்பீட்டு பிரீமியத்தை இன்னும் வசூலிக்காத வங்கிகள், இப்போது ஜிஎஸ்டி இல்லாமல் தொகையை ஏற்றுக்கொள்கின்றன. இந்த புதிய நடவடிக்கையால் லட்சக்கணக்கான மூத்த ஊழியர்கள் நேரடியாகப் பயனடைய உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *