மும்பை அகமதாபாத் இடையே இந்தியாவின் முதல் உள்நாட்டு புல்லட் ரயில் விரைவில் பாயும்

மும்பை அகமதாபாத் இடையே இந்தியாவின் முதல் உள்நாட்டு புல்லட் ரயில் விரைவில் பாயும்

இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக மும்பை மற்றும் அகமதாபாத் இடையே உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக புல்லட் ரயில் அறிமுகமாகிறது. மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில், 508 கிமீ நீளமுள்ள வழித்தடத்தில் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரயிலின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் தற்போது போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக 2027 ஆம் ஆண்டுக்குள் சூரத் முதல் வாபி வரை இந்தச் சேவையைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடல்வழிச் சுரங்கப்பாதை உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் 2029 டிசம்பருக்குள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிவேக ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும்போது, நீண்ட தூரப் பயணம் சில மணிநேரங்களாகக் குறைந்து பொதுமக்களுக்குப் பெரும் வசதியை ஏற்படுத்தும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *