முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
March 12, 2026

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த முடக்கத்தை நீக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து நான்கு வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய முடிவெடுக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தனது எம்.எல்.ஏ பென்ஷன் கணக்கு உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளதால் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுவதாக ராஜேந்திர பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த விவகாரத்தில் நான்கு வார காலக்கெடுவை நிர்ணயித்ததோடு, வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகவும் அவருக்கு அனுமதி அளித்து தீர்ப்பளித்தார்.