முத்ரா திட்டத்தில் வாராக்கடன் வெறும் 2 சதவீதம் மட்டுமே என நிர்மலா சீதாராமன் விளக்கம்
March 18, 2026

பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் சிறு தொழில்முனைவோருக்கு இதுவரை ரூ.39.48 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தார். எவ்வித பிணையமும் இன்றி சாதாரண மக்களும் வங்கிச் சேவையைப் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தில் ஒட்டுமொத்த வாராக்கடன் விகிதம் வெறும் 2 சதவீதமாக மட்டுமே உள்ளதால் கடன்கள் தேங்கியுள்ளதாகக் கருத முடியாது என அமைச்சர் விளக்கமளித்தார். நிலுவைத் தொகையை வசூலிக்க வங்கிகள் தீவிரக் கண்காணிப்பு மற்றும் ஒருமுறை தீர்வுத் திட்டம் போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.