முதியோர்களுக்கு நற்செய்தி ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு 8 சதவீத வட்டி கிடைக்கும் அதிரடி சலுகை
March 16, 2026

ஓய்வு பெற்ற முதியோர்களின் பாதுகாப்பான முதலீட்டிற்கு ஏதுவாக 5 வங்கிகள் தற்போது அதிகப்படியான வட்டி விகிதங்களை அறிவித்துள்ளன. நிலையான வட்டி மற்றும் குறைந்த இடர்பாடு காரணமாக இந்த சேமிப்பு முறை பலரையும் கவர்ந்துள்ளது. தற்போது மூத்த குடிமக்கள் தங்கள் வைப்புத்தொகைக்கு சுமார் 8 சதவீதம் வரை லாபகரமான வட்டியைப் பெற வாய்ப்புள்ளது.
சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 7.9 சதவீத வட்டியையும், ஜனா மற்றும் உஜ்ஜீவன் வங்கிகள் 7.7 சதவீதத்திற்கும் அதிகமான வட்டியையும் வழங்குகின்றன. 3 கோடி ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும். நிதி பாதுகாப்பை உறுதி செய்யவும், ஓய்வு காலத்தில் நிலையான வருமானத்தைப் பெறவும் இந்தத் திட்டங்கள் சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது.