மீம்ஸ்களில் கலக்கிய நடிகர் முருகன் மாரடைப்பால் திடீர் மரணம் திரையுலகம் அதிர்ச்சி
February 23, 2026

திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் முருகன் (வின்ஸ்டார் விஜய்) மாரடைப்பால் காலமானார். ‘எப்போதும் ராஜா’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். சாதாரண பின்னணியில் இருந்து வந்து சினிமாவில் தனது அடையாளத்தை உருவாக்க அவர் பல ஆண்டுகள் போராடியது குறிப்பிடத்தக்கது.
திரையைத் தாண்டி இவரது முகபாவனைகள் சமூக வலைதளங்களில் மீம்களாக வைரலாகி இளைஞர்களிடையே இவரைப் பிரபலமாக்கின. பலருக்கும் பெயர் தெரியாதபோதும் ‘மீம் அண்ணா’ என்று அன்போடு அழைக்கப்பட்டவரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.