மீண்டும் சிக்கும் ஆதவ் அர்ஜுனா நீதிமன்றத்தின் அதிரடி முடிவு
March 18, 2026

டிவிகே பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீதான பழைய வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து அவர் வெளியிட்ட சர்ச்சை பதிவு தொடர்பாக ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். இதனால் அடுத்த வாரம் இந்த வழக்கு மீண்டும் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நிம்மதி அடைந்திருந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு இந்த புதிய சட்டப் போராட்டம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.