மியூச்சுவல் ஃபண்ட் நாமினி விதிகளில் செபி கொண்டு வரும் அதிரடி மாற்றம்
March 18, 2026

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நாமினி தொடர்பான குழப்பங்களை தீர்க்க செபி புதிய நடைமுறைகளை ஆலோசித்து வருகிறது. தற்போதுள்ள 10 நாமினிகள் வரை நியமிக்கும் முறையை மாற்றி, அதிகபட்சமாக 4 பேராக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலீட்டாளருக்கு பின் சொத்துக்கள் சேருவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இனி நாமினியின் பெயர் மற்றும் உறவுமுறை மட்டுமே கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது; மற்ற விவரங்கள் விருப்பத்தின் அடிப்படையில் வழங்கலாம். நாமினிகளுக்கான பங்கீடு குறிப்பிடப்படாத பட்சத்தில், தொகை சமமாக பிரித்து வழங்கப்படும். இந்த புதிய விதிமுறைகள் குறித்து முதலீட்டாளர்கள் ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.