மின் வாரியத்தில் தொடரும் ஊதிய பாகுபாடு பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கடும் அதிருப்தி

மின் வாரியத்தில் தொடரும் ஊதிய பாகுபாடு பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கடும் அதிருப்தி

தமிழ்நாடு மின் வாரியத்தில் கடந்த 60 ஆண்டுகளாக அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் சீரான ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். 3 மற்றும் 4-ஆம் பிரிவு ஊழியர்களுக்கு மட்டும் ஒப்பந்தம் போடப்பட்டு, உயர்மட்ட அதிகாரிகள் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளதாக பாரதிய மின் பொறியாளர் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

மின் திட்டங்களை முன்னின்று நடத்தும் தங்களுக்கு சமமான ஊதிய திருத்தம் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த வரலாற்று முரண்பாட்டை உடனடியாகக் களைந்து, பாரபட்சமற்ற முறையில் அனைவருக்கும் ஊதிய உயர்வை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *