மின் கட்டணத்தை குறைக்க கோடை காலத்திற்கு முன்பே ஏசியை பராமரிக்கும் எளிய வழிகள்
February 23, 2026

கோடைக்காலம் தொடங்கும் முன் நீண்ட நாட்களாக பயன்படுத்தாத ஏசியை நேரடியாக இயக்குவது இயந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே முதலில் ஏசி பில்டர்கள் மற்றும் வெளிப்புற அலகுகளை சுத்தம் செய்வது அவசியம். தூசிகள் நீக்கப்பட்டால் காற்று சீராக பரவி மின் நுகர்வு கணிசமாக குறையும்.
பாதுகாப்பு கருதி மின் இணைப்புகள் மற்றும் ஒயரிங் முறையை சரிபார்க்கவும். ஏசியை எப்போதும் 24 டிகிரியில் வைப்பது மின் சேமிப்பிற்கு உதவும். தொழில்முறை நிபுணர்களை கொண்டு முழுமையாக சர்வீஸ் செய்வதன் மூலம் எரிவாயு கசிவு மற்றும் பிற தொழில்நுட்ப கோளாறுகளை தவிர்க்கலாம். இது கோடை வெயிலில் ஏசி தடையின்றி இயங்க வழிவகுக்கும்.