மின்சார அடுப்பு பயன்படுத்தும் ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகளுக்கு அதிரடி மானியம் வழங்கி தமிழக அரசு உத்தரவு

மின்சார அடுப்பு பயன்படுத்தும் ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகளுக்கு அதிரடி மானியம் வழங்கி தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மின்சார அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்கள், டீ கடைகள் மற்றும் கிளவுட் கிச்சன்களுக்கு யூனிட்டுக்கு 2 ரூபாய் மின் மானியம் வழங்கப்படுகிறது. இந்த சலுகை எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் வரை அமலில் இருக்கும் என மின்வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு போதுமான அளவில் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை உழவர் சந்தைகளில் தடையின்றி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விறகு அடுப்புகளை பயன்படுத்துவதற்கு இனி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் வீணாவதைத் தடுக்கவும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்த முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *