மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் சீறிப்பாயும் சென்னை போடி விரைவு ரயில்

மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் சீறிப்பாயும் சென்னை போடி விரைவு ரயில்

சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் விரைவு ரயில் வரும் மார்ச் 19 முதல் வாரத்தில் ஆறு நாள்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது வாரத்திற்கு மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படும் இந்த ரயிலானது, இனி சனிக்கிழமை தவிர மற்ற அனைத்து நாள்களிலும் இயங்கும். இதற்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ரயில் சேவை விரிவாக்கம் தென் மாவட்ட மக்களுக்கு பெரும் பயனை அளிக்கும். இரவு 10.30 மணிக்கு சென்னையில் புறப்படும் இந்த ரயில் காட்பாடி, சேலம், திண்டுக்கல் மற்றும் மதுரை வழியாக போடிநாயக்கனூர் சென்றடையும். மதுரை வரும் பயணிகள் அங்கிருந்து மற்ற தென் மாவட்டங்களுக்குச் செல்ல இணைப்பு ரயில் வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *