மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நடைபெறும் இஃப்தார் விருந்தில் பங்கேற்கிறார் விஜய்
March 16, 2026

தமிழக வெற்றி்க் கழகத் தலைவர் விஜய் நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்கிறார். சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ராயப்பேட்டையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தவிர்க்க இந்த முறை மாமல்லபுரத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் விஜய் அரசியல் பேசமாட்டார் என்றாலும், இஸ்லாமிய சமூகத்தினருடன் என்றும் துணையாக இருப்பேன் என்ற உறுதிமொழியை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், என்டிஏ கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக வெளியான தகவலை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.