மாதுரி தீட்சித்தை அவமதித்த காங்கிரஸ் தலைவர்!
March 15, 2025

பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் பற்றிய கருத்தால் விவாதத்தில் சிக்கியுள்ளார் ராஜஸ்தான் காங்கிரஸ் உறுப்பினர் டிகாராம் ஜூலி. மாதுரி ஒரு ‘இரண்டாம் நிலை’ நடிகை என்றும், அவரது காலம் முடிந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜூலி, ‘மாதுரி தீட்சித் இரண்டாம் நிலை நடிகை. “தில்”, “பேட்டா” படங்கள் வெளியான போது அவரின் பெயர் பிரபலம் ஆனது. ஆனால் இனி அவரின் காலம் முடிந்துவிட்டது,’ என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி இதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.