மஹாராஷ்டிராவில் ஓடும் மரண பிடி காரின் ஜன்னலை துளைத்த இரும்பு கம்பிகள்

மஹாராஷ்டிராவில் ஓடும் மரண பிடி காரின் ஜன்னலை துளைத்த இரும்பு கம்பிகள்

மஹாராஷ்டிராவில் இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற சிறிய டெம்போ டிரக் ஒன்று முன்னால் நின்றிருந்த கார் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. டிரக்கில் விதிமுறைக்கு மாறாக நீட்டிக்கொண்டிருந்த கூர்மையான கம்பிகள், காரின் பின்னால் இருந்த கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே ஊடுருவின. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக விபத்தின் போது காரின் பின் இருக்கையில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் இத்தகைய வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *