மலேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை

மலேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை

மலேசியாவின் போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்தில் திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கோட்டா கினபாலு நகருக்கு வடகிழக்கே 100 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை 12:57 மணியளவில் ஏற்பட்ட இந்த நடுக்கத்தால் உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. நிலைமையை மலேசிய வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வரும் வேளையில் கடலில் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *