மருத்துவ அதிசயம் மூன்று ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை மருத்துவர்கள் ஆச்சரியம்

வடக்கு ஈராக்கில் உள்ள மோசுலில் மூன்று ஆணுறுப்புகளுடன் ஒரு பச்சிளம் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவ வரலாற்றில் ஒரு குழந்தைக்கு மூன்று கூடுதல் ஆணுறுப்புகள் (ட்ரைஃபாலியா) இருப்பது இதுவே முதல் முறையாகும். பொதுவாக, கூடுதல் ஆணுறுப்புகள் (சூப்பர்நியூமரேரி பெனிஸ்) 50 முதல் 60 லட்சம் பிரசவங்களில் ஒருவருக்கு ஏற்படுகிறது. இருப்பினும், இதுவரை இரண்டு ஆணுறுப்புகள் (டைஃபாலியா) கொண்ட சுமார் 100 நிகழ்வுகளே உலகளவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அசாதாரண நிகழ்வு உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், இது ஒரு மருத்துவ ஆய்வு அறிக்கையாக சர்வதேச அறுவை சிகிச்சை இதழில் (International Journal of Surgery) வெளியிடப்பட்டுள்ளது.
குழந்தைக்கு ஒரு சாதாரண ஆணுறுப்புடன் கூடுதலாக 2 செமீ மற்றும் 1 செமீ நீளமுள்ள இரண்டு ஆணுறுப்புகள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கூடுதல் உறுப்புகள் செயலற்ற நிலையில் இருந்தன. பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் தேவையற்ற இரண்டு ஆணுறுப்புகளையும் அகற்ற முடிவு செய்துள்ளனர். கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அல்லது பரம்பரை மரபணுக் காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டில் இந்தியாவிலும் இதே போன்ற ஒரு வழக்கு பதிவானது, ஆனால் அப்போது போதுமான மருத்துவ ஆவணங்கள் கிடைக்கவில்லை.