மரணம் நெருங்கிய தருணம்! ராட்சத ராஜநாகத்தின் கோரத் தாக்குதல்: மயிர்சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்
December 14, 2025

ராட்சத ராஜநாகத்தின் (King Cobra) தாக்குதல் தொடர்பான அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு நபர் மிகப் பெரிய பாம்பின் அருகில் நேருக்கு நேர் நிற்கிறார். திறந்த வெளியில் அந்தப் பாம்புக்கு மிக அருகில் அவர் நிற்பதைக் காண முடிகிறது. பாம்பு சீறிப் பாய்ந்து அவரைத் தாக்க முயன்றபோது, அந்த நபர் மின்னல் வேகத்தில் தன்னைத் தற்காத்துக் கொண்டு விலகிச் செல்கிறார்.
இந்தப் பயங்கரமான சம்பவம் கண்மூடித் திறப்பதற்குள் நடந்தாலும், அதிர்ஷ்டவசமாக அந்த நபர் காயமின்றி உயிர்தப்பினார். ‘therealtarzann’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த திகிலூட்டும் வீடியோவை இதுவரை 39 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வனவிலங்குகளுடன் விளையாடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இது நிரூபிக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.