மம்மூட்டி மற்றும் மோகன்லாலுடன் நடித்த பிரபல நடிகர் இஏ ராஜேந்திரன் காலமானார்
March 27, 2026

மலையாளத் திரையுலகின் மூத்த குணச்சித்திர நடிகர் இஏ ராஜேந்திரன் (71) உடல்நலக்குறைவால் காலமானார். கொல்லத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தது திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் முகேஷ் மாதவனின் உறவினரான இவர், மேடை நாடகங்கள் மூலம் அறிமுகமாகி ‘நரசிம்மம்’, ‘மீச மாதவன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவரது மறைவுக்கு மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் கொல்லத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.