மம்தா பானர்ஜியின் தேர்தல் வியூகத்தை தவிடு பொடியாக்கிய தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை

மம்தா பானர்ஜியின் தேர்தல் வியூகத்தை தவிடு பொடியாக்கிய தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை

மேற்கு வங்கத்தில் நேர்மையான தேர்தலை உறுதி செய்ய அம்மாநில காவல் துறையில் இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சாதகமான அதிகாரிகள் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதால், அவரின் ‘சிண்டிகேட்’ முறையிலான திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி மாற்றங்கள் ஆளுங்கட்சியின் தேர்தல் கணக்குகளை தலைகீழாக மாற்றியுள்ளன.

புதிய உத்தரவின்படி சித்த நாத் குப்தா டிஜிபியாகவும், அஜய் குமார் நந்த் கொல்கத்தா காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பிர்பூம், கூக்பெஹார் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களுக்கும் புதிய எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்று, மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நடவடிக்கைகள் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *