மனைவி மற்றும் 5 குழந்தைகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை பாகிஸ்தானில் பயங்கரம்

மனைவி மற்றும் 5 குழந்தைகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை பாகிஸ்தானில் பயங்கரம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சார்கோதா மாவட்டத்தில், முகமது யாசீன் என்ற நபர் தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளை கோடாரியால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 15 நள்ளிரவில், தூங்கிக்கொண்டிருந்த 45 வயது மனைவி, 15 வயது மகள் மற்றும் 4 மகன்களை அவர் கொடூரமாக தாக்கியுள்ளார். தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகமே இந்த கொடூரத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்த பின் தற்கொலைக்கு முயன்ற யாசீன், தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் ‘ஆணவப் படுகொலை’ என்ற பெயரில் ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் பெண்கள் உயிரிழப்பதாக மனித உரிமைகள் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. இந்த மனிதாபிமானமற்ற செயல் அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *