மனைவியின் உழைப்பால் தான் கணவர் சம்பாதிக்கிறார் என்பதால் ஜீவனாம்சம் மறுக்க முடியாது

மனைவியின் உழைப்பால் தான் கணவர் சம்பாதிக்கிறார் என்பதால் ஜீவனாம்சம் மறுக்க முடியாது

ஒரு இல்லத்தரசியின் உழைப்பு அவரது கணவர் சிறப்பாகப் பணியாற்றி சம்பாதிக்க உதவுகிறது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே பராமரிப்புத் தொகை தொடர்பான வழக்குகளில் மனைவியின் பங்களிப்பைப் புறக்கணிப்பது முற்றிலும் அநீதியானது என்று நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

சம்பாதிக்கும் திறன் இருப்பதற்கும் உண்மையில் சம்பாதிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மனைவி வேலைக்குச் செல்லாததை அவரது சோம்பேறித்தனமாகக் கருத முடியாது. வேலை செய்ய முடியும் என்ற காரணத்தைக் காட்டி ஒரு பெண்ணுக்கான ஜீவனாம்ச உரிமையை நிராகரிக்க முடியாது என நீதிமன்றம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *