மத்திய கிழக்கு போர் பதற்றத்திற்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து குஜராத் வந்தடைந்தது இந்திய கப்பல்

மத்திய கிழக்கு போர் பதற்றத்திற்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து குஜராத் வந்தடைந்தது இந்திய கப்பல்

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் ஈரான் விதித்துள்ள தடையை மீறி இந்திய எரிவாயு கப்பலான ‘சிவாலிக்’ பாதுகாப்பாக குஜராத்தின் முண்ட்ரா துறைமுகத்தை வந்தடைந்தது. ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நடத்திய தொடர்ச்சியான பேச்சுவார்த்தையின் பலனாக இந்த இராஜதந்திர வெற்றி கிடைத்துள்ளது. இதன் மூலம் நாட்டில் நிலவி வந்த சமையல் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் பெருமளவு குறைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியில் இன்னும் சிக்கியுள்ள மற்ற இந்திய சரக்குக் கப்பல்களை விடுவிக்கவும் மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் நடுநிலையான வெளியுறவுக் கொள்கை மற்றும் ஈரானுடனான வரலாற்று ரீதியான நட்புறவே இந்த இராஜதந்திர நகர்வுக்கு முக்கிய காரணமாகும். எவ்வித கூடுதல் சலுகைகளும் வழங்கப்படாமல் பேச்சுவார்த்தை மூலம் இந்த தீர்வு எட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *