மத்திய கிழக்கில் போர் பதற்றம் எதிரொலி இந்தியா மற்றும் அமீரகம் இடையேயான விமான சேவைகள் அதிரடி குறைப்பு

மத்திய கிழக்கில் போர் பதற்றம் எதிரொலி இந்தியா மற்றும் அமீரகம் இடையேயான விமான சேவைகள் அதிரடி குறைப்பு

பெர்சிய வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான விமான போக்குவரத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே வெடித்துள்ள போர் காரணமாக வான்வழிப் பாதையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் அமீரக விமான போக்குவரத்து துறையின் அறிவுறுத்தலின்படி இந்திய தூதரகம் விமான அட்டவணைகளை மாற்றி அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

தற்போது துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து இந்தியாவுக்கு மிகக் குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்படும். இதன் தொடர்ச்சியாக ஏர் இந்தியா நிறுவனம் தனது பல விமான சேவைகளை ஏற்கனவே ரத்து செய்துள்ளது. பயணிகள் தங்களின் பயணம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த திடீர் மாற்றத்தால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *