மத்திய கிழக்கில் ஈரான் ஏவிய நடனமாடும் ஏவுகணை செஜில் ஏற்படுத்திய பெரும் பதற்றம்

மத்திய கிழக்கில் ஈரான் ஏவிய நடனமாடும் ஏவுகணை செஜில் ஏற்படுத்திய பெரும் பதற்றம்

தொடர் மோதலின் 16வது நாளில் ஈரான் தனது அதிநவீன ‘செஜில்’ பாலிஸ்டிக் ஏவுகணையை முதன்முதலில் களமிறக்கியுள்ளது. 2,000 கிமீ உயரத்தில் பறந்து திசையை மாற்றும் திறன் கொண்டதால் இது ‘நடனமாடும் ஏவுகணை’ என அழைக்கப்படுகிறது. எதிரிகளின் வான் பாதுகாப்பு வளையங்களைத் தகர்க்கும் இந்த ஏவுகணை, இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளின் தளங்களை குறிவைத்து ஏவப்பட்டுள்ளது. சுமார் 700 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லும் ஆற்றல் இதற்கு உண்டு.

இந்த மும்முனைப் போரில் இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால் உலகளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் துபாய் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் மற்றும் தீ விபத்து காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய ஆயுதப் பயன்பாடு மத்திய கிழக்கின் போர் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *